Wednesday, December 31, 2008

அமெரிக்காவிற்கு வக்காலத்து

இந்த ப்ளாகோஸ்பியரில் (how to say Blogosphere in Tamil?) அமெரிக்காவை திட்ட நிறையப்பேர் இருக்காங்க. இதே அமெரிக்கா செய்யும் பல நல்ல காரியங்களை கொஞ்சம் சொல்லலாம் என்று தோன்றுது.


* உலகிலேயே பிற நாட்டவருக்கு உதவி அதிகம் தருவது அமெரிக்கா மக்கள்தான். அமெரிக்கா அரசாங்கத்தைவிட மூன்று மடங்கு உதவி அளிப்பதாக ஒரு survey சொல்லுது. இதே அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் இயற்கைச் சீற்றங்கள் (Natural Disasters) வாயிலாக பல ஆயிரம் மக்கள், பல லட்சம் கோடி இழக்கிறார்கள். வேறு எந்த நாடு இவர்களுக்காக உதவுகிறார்கள்?

* உலகிலேயே எயிட்ஸ் நோய் தடுப்பிற்கு அமெரிக்காதான் அதிகத் தொகை செலவிடுது. ஆப்பிரிக்கா, இந்தியா, பாக்கிஸ்தான் எல்லாம் கை ஏந்தி நிற்கும் போது மற்றும் அமெரிக்காவை திட்டத் தோன்வதில்லை. பணம் கொடுப்ப்தால் அதற்கான பலனை கேட்பதால், அமெரிக்கா கெட்டதாக மாறிவிடுகிறது.

* மொழி, மதம், மற்றும் இனம் பார்க்காமல், திறமை மற்றும் இருந்தால் போறும். ’வா, வந்து பிழை’, என்று வரவேற்பதால், அமெரிக்காவை கெட்ட நாடு கத்துவது, சிரிக்கத்தக்கது. கனடா மற்றும் ஆஸ்ட்ரேலியா கற்றுக்கொண்டுவிட்டன. அமெரிக்காவை பார்த்து நாமும் கற்றுக்கொள்ள வேண்டாமா?

* இந்தியாவும், பாக்கிஸ்தானும் பெரிய லெவலில் அடித்துக் கொல்லாமல் இருக்காங்கன்னா, நம்ம பெரியண்ணன் தான் காரணம்.இல்லாட்டி இந்நேரம் ஆப்பிரிக்கா கண்டம் மாதிரி ஆகியிருப்போம்.

இதற்காக அமெரிக்கா செய்வது எல்லாம் நல்ல காரியம் என்று சொல்லவில்லை. அதே சமயம், எந்த ஒரு பிரச்சனைக்கும் அமெரிக்காவை குறை கூறிக்கொண்டிருந்தால், பிரச்சனை சரியாகாது.

நீங்க என்ன நினைக்கிறீர்கள்?

தேவர் மகன்

கொஞ்ச நேரம் முன்னர், ’தேவர் மகன்’ படத்தை aarampam.com-இல் பார்த்தேன். பல வருடங்களுக்கு முன் பார்த்தது! மறுமுறை பார்க்கும் போது, it brings a different perspective to the direction and editing. சிவாஜி, கமல், நாஸர், ரேவதி, கெளதமி, மற்றும் வடிவேலு எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்து இருக்கிறார்கள். நாஸரின் வீம்புக்குத்தான் சரியான விளக்கம் இல்லை என்று தோன்றியது.

அடித்துக்கொண்டு சாவதை கெளரவம் என்ற எண்ணம் என்றுதான் மாறுமோ? நம்ம மதுரை பக்கம் மட்டும் தான் என்று இல்லை; ஆஃப்கானிஸ்தான், இஸ்ரேல் - பாலஸ்தீனம், பாதி ஆப்பிரிக்கா கண்டம் என்று எங்கும் இந்த உணர்வுதான் மேலோங்கி உள்ளது. இந்த கோபத்தையும் வேகத்தையும் ஆக்கபூர்வமாக உபயோகித்தால் எங்கோ போயிருப்போம்!

Friday, December 26, 2008

ஆரம்பம் அபாய சங்கு

பலரின் கருத்துக்களையும் நாள்தோரும் படித்துவருவதால், நாமும் கருத்துக்களை பதிவு செய்தால் என்ன என்ற ஆசையில் ஆரம்பிச்சுட்டேன் என் ஆலாபனையை.
என் கருத்துக்களை நீங்க படிக்கனும் என்ற விருப்பத்துடன், உங்களின் மாற்றுக் கருத்துக்களையும் கேட்க எனக்கு ஆசை.