இந்த ப்ளாகோஸ்பியரில் (how to say Blogosphere in Tamil?) அமெரிக்காவை திட்ட நிறையப்பேர் இருக்காங்க. இதே அமெரிக்கா செய்யும் பல நல்ல காரியங்களை கொஞ்சம் சொல்லலாம் என்று தோன்றுது.
* உலகிலேயே பிற நாட்டவருக்கு உதவி அதிகம் தருவது அமெரிக்கா மக்கள்தான். அமெரிக்கா அரசாங்கத்தைவிட மூன்று மடங்கு உதவி அளிப்பதாக ஒரு survey சொல்லுது. இதே அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் இயற்கைச் சீற்றங்கள் (Natural Disasters) வாயிலாக பல ஆயிரம் மக்கள், பல லட்சம் கோடி இழக்கிறார்கள். வேறு எந்த நாடு இவர்களுக்காக உதவுகிறார்கள்?
* உலகிலேயே எயிட்ஸ் நோய் தடுப்பிற்கு அமெரிக்காதான் அதிகத் தொகை செலவிடுது. ஆப்பிரிக்கா, இந்தியா, பாக்கிஸ்தான் எல்லாம் கை ஏந்தி நிற்கும் போது மற்றும் அமெரிக்காவை திட்டத் தோன்வதில்லை. பணம் கொடுப்ப்தால் அதற்கான பலனை கேட்பதால், அமெரிக்கா கெட்டதாக மாறிவிடுகிறது.
* மொழி, மதம், மற்றும் இனம் பார்க்காமல், திறமை மற்றும் இருந்தால் போறும். ’வா, வந்து பிழை’, என்று வரவேற்பதால், அமெரிக்காவை கெட்ட நாடு கத்துவது, சிரிக்கத்தக்கது. கனடா மற்றும் ஆஸ்ட்ரேலியா கற்றுக்கொண்டுவிட்டன. அமெரிக்காவை பார்த்து நாமும் கற்றுக்கொள்ள வேண்டாமா?
* இந்தியாவும், பாக்கிஸ்தானும் பெரிய லெவலில் அடித்துக் கொல்லாமல் இருக்காங்கன்னா, நம்ம பெரியண்ணன் தான் காரணம்.இல்லாட்டி இந்நேரம் ஆப்பிரிக்கா கண்டம் மாதிரி ஆகியிருப்போம்.
இதற்காக அமெரிக்கா செய்வது எல்லாம் நல்ல காரியம் என்று சொல்லவில்லை. அதே சமயம், எந்த ஒரு பிரச்சனைக்கும் அமெரிக்காவை குறை கூறிக்கொண்டிருந்தால், பிரச்சனை சரியாகாது.
நீங்க என்ன நினைக்கிறீர்கள்?
Wednesday, December 31, 2008
Subscribe to:
Post Comments (Atom)
ம்.. நடக்கட்டும்.. நடக்கட்டும்.
ReplyDeleteயாருக்கு வக்காலத்து வாங்கி என்ன, நடப்பவை நடந்து கொண்டேதான் இருக்கும்.
முதலில் இந்த word verification ஐ தூக்குங்க. இது இருந்தால் பின்னூட்டம் போடுபவர்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்.
ReplyDeleteகமெண்ட் மாடரேஷன் இருந்தால் மட்டும் போதுமானது. தேவையான கமெண்டுகளை மட்டும் ரிலீஸ் பண்ணலாம்.
niraya yeluthungal .valthukkal
ReplyDelete